பையா


"பையா"- பீமா அளித்த அடியில் இருந்து லிங்குசாமி மீள்வார் என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது படத்தின் 'ட்ரெய்லர்.

ஒரு நாயகன். ஒரு நாயகி. ஒரு 'கார் பயணம். சுபமாக முடிகிறது படம்.

கார்த்தி நாயகனாக. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் அதிர்ஷடக் காற்று அவர் பக்கம் வீசி உள்ளது என்றே சொல்ல வேண்டும். முதல் பார்வையில் காதலில் விழும் பாரம்பரிய தமிழ்ப் பட நாயகர்கள் வரிசையில் இப்படத்தின் மூலம் கார்த்தியும் சேர்ந்துள்ளார். நல்லதொரு பொழுதுபோக்கு படத்தில் அழகாய், நிதனமாய் அசத்தியுள்ளார். கார் ஓட்டிக் கொண்டும், முக பாவணைகளால் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டும், எத்தனை பேர் வந்தாலும் அடித்துக் கொண்டும் இருக்கும் சிவா என்ற பாத்திரத்திற்கு சரியாக பொருந்துகிறார் கார்த்தி. எப்பொழுதும் ஒரு கிண்டலான புன்முறுவலை உதடுகளின் வலது ஓரத்தில் அடக்கி வைத்துள்ளார் படம் முடியும் வரை.

தமன்னா நாயகியாக. சில இடங்களில் அழகாய் தெரிகிறார். சாரு என்ற பாத்திரத்தில் கல்யாணத்திற்கு பயந்து காரின் பின் இருக்கையில் அமைதியாய சோகத்தை விழுங்கிக் கொண்டு அமர்ந்து வருவது போன்ற கடினமான கதாபாத்திரத்தில் சுலபமாக நடித்துள்ளார். மழையில் ஒரு பாட்டிற்கு ஆடும் பொழுது மேலாடைகள் நனைந்து விடுமென்ற அவரது முன்னெச்சரிக்கை பலருக்கு பிடித்திருந்தாலும் சிலரை நெளிய வைக்கலாம்.

ஜெகன் சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். மிலிந் சோமன் வில்லனாக வந்து கார்த்தியிடம் வாங்கி கட்டிக் கொள்கிறார். எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாம் நாயகனிடம் உதை வாங்கிக் கொள்ளலாம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் படம் வெளிவரும் முன்பே இளைஞர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் வரிசையில் இடம் பெற்று விட்டன. அதற்கு மற்றொரு காரணம் பாடலாசிரியர் நா.முத்துகுமார். பிண்ணனி இசையும் கலக்கல். மதியின் ஓளிப்பதிவு அவ்வளவு அருமை. சண்டைக் காட்சிகளில், கார் சேசிங்கில் 'கேமிராவும் ஒரு பாத்திரமாக மாறி 'ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு உதவுகிறது. ஆன்டனியின் படத்தொகுப்பும் படத்தின் அழகிற்கு மற்றொரு காரணம். ராஜ சுந்தரம் போன்றவர்கள் நடனாசிரியராக இருந்தும் அருமையான பாடல்களுக்கு சுமாரான நடனத்தையே அளித்துள்ளார் கார்த்தி.

இயக்குனர் லிங்குசாமி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனினும் படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் மோசம் செய்யவில்லை. கார்த்திக்கின் வசனம் சொல்லும் தோரனை, சுங்கச் சாவடியில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நாயகன் செய்யும் யோசனைகள் என இயக்குனர் பல இடங்களில் பளீச்சிடுகிறார். கதையை மட்டும் நம்பாமல் தமன்னாவையும் சிறிது நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

'பையா' இளவட்டங்களை திரையரங்கிற்கு தனது பாடல்களால் வரவழைத்து ஓரளவு நிறைவை தரும் என்று நம்பலாம்.

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 419
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
ragu பதிந்த நேரம் :03-04-2010 14:48:48
படத்தில் கொஞ்சம் ரெட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து இருக்கலாம். கார்த்திக் மற்றும் தமனாவின் நடிப்பு நல்லா இருக்கு.. படத்தில் காதலுக்கும், பாடலுக்கும் மட்டுமின்றி படம் முழுவதும் வந்து செல்கிறார் தமனா. கார்த்திக்கின் நடிப்பு அருமை. எப்படி பட்ட கதாபாதிரதுக்கும் நான் தயார் என்று முந்தி கொண்டு வருகிறார். கொஞ்சம் டான்ஸ் ஆட கத்துகிட்டா நல்லா இருக்கும் .படம் ஓட்டப்படவேண்டிய அவசியமில்லை, தானாக ஓடிடும் ..