குட்டி

"குட்டி" - தமிழாண்டு விரோதி மாதம் தை முதல் தேதியில் தனுஷ் நடித்து வெளி வந்திருக்கும் படத்தின் மூலம் 'ஆர்யா' என்ற தெலுங்கு படம்.

பாராளமன்ற உறுப்பினரின் மகன் நாயகியை காதலிக்கிறார். நாயகியும் ஒருவாறுஅக்காதலை ஒற்றுக் கொண்ட பின், நாயகன் தன் காதலை நாயகியிடம் சொல்கிறார்.அதிரும் நாயகியை விட பலமாக அதிருகிறார் பா.ம.உ.வின் மகன். உன் காதலில்நம்பிக்கை இருந்தால் என் முயற்சியை தடுக்காதே என சவால் விடுகிறார் நாயகன்.சவாலை ஒப்புக் கொள்ளும் பா.ம.உ.வின் மகனுக்கும், நாயகனுக்கும் சுவாரஸ்யமானபோட்டி நடக்கிறது. முடிவில் எவர் கையை நாயகி பிடிக்கிறார் என்பதுடன் படம்சுபம் ஆகிறது.

வழக்கமான தனுஷ் படம் போல் அல்லாமல் வித்தியாசமாக உள்ளது. தனுஷ்கதாபாத்திரத்திற்காக அடக்கி வாசிப்பதும் கூட கண்ணிற்கு நிறைவாக தான்உள்ளது. ஆனால் பாவம் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது உறுதி. தனுஷின்நடிப்பில் தெரியும் மெருகு படத்தின் பலம். கடைசிக் காட்சிகளில் மிகைஇல்லாமல் நிறைவாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா. இயக்குனர் சொல்வதை செய்யும் கிளிப் பிள்ளையோ என சந்தேகம்தோன்றுகிறது. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பும், அழ வேண்டிய இடத்தில்அழுகையும் கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். சில இடங்களில் அவர் முகத்தில்முதிர்ச்சி தெரிகிறது. கவனிக்கவும் நடிப்பில் அல்ல.

படத்தின் மற்றொரு பலம் பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் தெரியும் துல்லியம்.செவ்வானம், சுனை, மலைகள், மரங்கள், இரண்டாம் பாதியில் வரும் நீரோர வீடு,தொடருந்து, கல்லூரி தாழ்வாரம், நாயகன் வீட்டு வசிப்பிடத்தின் மொட்டை மாடி,நாயகி தங்கியிருக்கும் விடுதியின் படிக்கட்டுகள் என அனைத்தும் காட்சிகளில்அழகாய் விரிகிறது.  தேவி பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படிஉள்ளது. "யாரோ என் நெஞ்சில்” பாடலும், "பீல் மை லவ்" பாடலும் அதில்குறிப்பிடத் தக்கது.

படம் மிக நிதானமாக பயணிப்பது குறையாக உள்ளது. மேலும் இந்த 'காதல்' என்றஒன்று  தமிழ் திரைப்படங்களில் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சம் அல்ல. சீட்டுகுலுக்கி போட்டு காதலரை தேர்ந்தெடுப்பார்கள் போல. சில நேரம் அவன்/அவள்சரியாக இருப்பது போல் தோன்றும். சில நேரங்களில் இவன்/இவள் சரியாகஇருக்கும் என தோன்றும். பாவம். இவ்ளோ வாய்ப்புகள் சுற்றியிருந்தால்முடிவெடுப்பது நாயகி போல் அனைவருக்கும் சிரமம் தானே. வாழ்க தமிழ் படங்கள்வளர்க்கும் காதல். இது போதாது என்று கடைசி நேரம் வரை வேறு பயங்கரமாகயோசித்து சட்டென்று மணவறை விட்டோடி எழுந்து ஆளை மாற்றி, பெற்றொர் முதல்வந்திருக்கும் அனைவரையும் முட்டாளாக்குவது என சகல அவலங்களையும் பலகாலங்களாக சுமக்கும் தமிழ் திரைப்பட கலாச்சாரம் இப்படத்திலும் தொடர்கிறது.

ஒருவேளை 'சன் பிக்சர்ஸ்' இப்படத்தை வெளியிட்டிருந்தால் 'குட்டி' எழுந்து நின்றிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.


ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 281
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
தினேஷ் பதிந்த நேரம் :30-01-2010 09:48:45
நீ தனுஷ் ரசிகையா!! :O சொல்லவே இல்ல. அவ்வ்வ்வ்வ்..
Kuil பதிந்த நேரம் :25-01-2010 10:04:02
"ஆனால் பாவம் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது உறுதி" this statement is entirely wrong......... we[fans] will accept whatever Dhanush acts.....It doesn't matter for us.....Ha ha ha.....:)
சே. ராஜப்ரியன் பதிந்த நேரம் :20-01-2010 23:11:10
நல்ல பகிர்வு ..............