தீராத விளையாட்டுப் பிள்ளை

"தீராத விளையாட்டுப் பிள்ளை" - தோரணைக்கு பிறகு விஷால் நடித்து வெளிவந்துள்ளப் படம். எதற்கெடுத்தாலும் 'சண்டக்கோழி' போல் திமிறிக் கொண்டுகெட்டவர்களை வெளுக்கும் கதாபாத்திரத்திற்கு ஓய்வளித்து விட்டு 'ப்ளே பாய்'கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவருக்கு பொருந்தியதா என்றால் இல்லை என்பதேநிதர்சனம்.

எழுதுகோல் முதல் தான் உபயோக்கிகும் அனைத்தும் சிறந்ததாக இருக்க வேண்டும்என நினைப்பவன் கதாநாயகன். வாழ்க்கை துணையையும் அதே போல் சிறந்ததாகதேர்ந்தெடுக்கலாம் என மூவரை காதலிக்கிறார். நடுவிலேயே இவ்விஷயத்தை தெரிந்தகொண்ட ஒரு பெண், நாயகனோடு காதலை முறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மற்றஇரு பெண்களின் காதலையும் பிரித்து நாயகனை பைத்தியமாக்குவதாக சவால்விடுகிறார். எவ்வளவோ சவால்களை சந்தித்த நம் தமிழ்ப் பட நாயகர்கள் இதைசந்திக்க மாட்டனரா? முடிவு நம் யூகங்களுக்கு உட்பட்டு தான் எனினும், அதைஎப்படி சாதிக்கிறார் என்பது தான் படத்தின் முடிவு.

விஷால். வங்கியில் வேலை செய்யும் பெற்றோர்களின் செல்ல மகன்.'ப்ளே-பாய்'யாக விஷால் நடித்துள்ளார் என இயக்குனர் திரு பேட்டி எல்லாம்கொடுத்துள்ளார். தலைப்பிலும் விளையாட்டுப் பிள்ளை என ப்ளே-பாயைமொழிபெயர்த்துள்ளதால் கார்த்திக் என்ற கதாபாத்திரம் ப்ளே-பாய் தான் எனநம்பி வைக்கலாம். எரிச்சல் ஏற்படுத்தி வரும் விஜய் போன்றே விஷாலும்நடித்து இப்படத்திலும் எரிச்சலை ஏற்படுத்துகிறார். யார் பெத்த பிள்ளையோ எனபரிதாபப்படும் படி பாட்டிற்கு எல்லாம் கடற்கரை ஓரமாக கை காலை காக்காவலிப்பு வந்தது போல் ஆட்டிக் கொண்டிருக்கிறார். ஓடி வரும் அடியாள் ஒருவனைஎட்டி உதைத்து விட்டு, விஷால் வேட்டியை மடித்துக் கட்டியதும் சாலையில்இருக்கும் சருகுகள் எல்லாம் காற்றடித்து பறக்கின்றன. வேட்டிக்கு அடியில்விஷால் விசிறி ஏதாவது வைத்திருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறார். விஷாலை வைத்து இயக்குனர் நையாண்டி பண்ணி விட்டார் போல.

மூன்று கதாநாயகிகள். அதில் நீது சந்திரா என்பவருக்கு மட்டும் பாதிபடத்திற்கு மேல் வில்லியாக பதவி உயர்வு கிடைப்பதாலும், சவால் விடுவதாலும்,நாயகனுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்துவதாலும் மனதில் நிற்கிறார். நாயகன் தன்உடைகளை கிழித்துக் கொண்டு பைத்தியமாக அலைய செய்வேன் என்று நீது சந்திராசூளரைக்கும் போதே நீது சந்திராவின் உடையையே யாரோ கிழித்து விட்டது போல்தான் உள்ளது. ஷூ லேஸ், கர்சீஃப், குட்டி டவல் போன்றவற்றால் நெய்யப்பட்டஅதி சிக்கன உடையையே அணிகிறார். அதுவும் நாய் கடித்த வைத்த மீதம் போல் உடைஅங்கொன்றும் இங்கொன்றுமாக கிழிந்து தொங்குவது போல் வித்தியசாமானஉடைகளிலேயே வருகிறார். படத்தில் அவர் ஏற்றியிருக்கும் கதாபாத்திரத்தின்சொத்து மதிப்பு 1500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஸ்ரீ தத்தா. ஆண்களையே பிடிக்காத கதாபாத்திரத்தில் வருகிறார். பிரகாஷ்ராஜின் தங்கையாக பாதி படத்திற்கு மேல் பரிணாமிக்கிறார். அதிகபில்டப்புகளுடன் இப்படத்தில் அறிமுகமாகும் ஒரே கதாபாத்திரமான இவர் படம்செல்ல செல்ல மெது மெதுவாக தனது முக்கியத்துவத்தினை இழக்கிறார்.

சாரா ஜென் டயஸ். மூவரில் கதாநாயகி என கடைசியில் மீதம் இருப்பவர் இவரே.இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் நெற்றியில் பொட்டுடன் வருகிறார். நாய்வாங்கி கொடுத்ததால் நாயகனின் காதலை முழுமையாக உணர்ந்து மகிழ்கிறார். அதைதொடர்ந்து வரும் பாட்டிற்கு ஆடவும் செய்கிறார். உடனே அந்த மூவரில் இவர்தான் கதாநாயகி என்ற ரகசியம் முடிச்சவிழ்கிறது.

சந்தானம். உட்கார முடியாத முதல் பாதியில் இவர் மட்டுமே ஆறுதல். பானைவயிறோடு வரும் மயில்சாமி விஷால் மற்றும் சந்தானத்திற்கு நண்பனாகநடித்திருப்பது படத்திற்கு மேலுமொரு சிறப்பு. அவருக்கு இணையான தொப்பைவைத்திருக்கும் சத்யன் 'ட்ராஃபிக் கான்ஸ்டபிள்'ஆக நடித்திருப்பதால்கதாபாத்திரத்தோடு அவரைப் பொறுத்தி பார்க்க முடிகிறது.

பிரகாஷ் ராஜ். இரண்டாம் பாதியில் இவர் தோன்றியவுடன் மனதிற்கு சற்றே ஆறுதல்கிடைக்கிறது. வில்லியின் உடையில் உள்ள சிக்கனம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளகாட்சிகளிலும் உள்ளதால் இவரும் சொல்லிக் கொள்ளும்படி சோபிக்கவில்லை. ஆனால்தோன்றும் காட்சிகளில் பெரிய ஆறுதலாக உள்ளார்.


இயக்குனர் திரு. இரண்டாம் பாதியில் கொஞ்சம் பரவாயில்லை. முதல் பாதியில்இருக்கும் அபத்தங்கள் பட்டியலிட்டு மாளாது. அதுவும் படத்தில் வரும்வசனங்கள், பாத்திரங்களின் கடைசி நிமிட பல்டி என பிரித்து பிரித்துசொல்லாமல் மொத்தமாக பேத்தல் என முடித்து விடலாம். என்ன சொல்லி தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா ரெட்டியை சம்மதிக்க வைத்தாரோ தெரியவில்லை.

இசை. யுவனையும் சிலாகிக்க முடியவில்லை. சில பாடல்கள் கேட்கும்படிஇருந்தாலும், ஒரு பாட்டிற்கு ரசிகர்கள் புகைத்து விட்டு வந்த சிலநொடிகளிலேயே அடுத்த பாட்டு தேவையில்லாமல் முளைக்கிறது. விஷால் மற்றும்நாயகிகள் வேறு பாடல் காட்சிகளில் தோன்றி மேலும் கடுப்பேத்த, ஆறுதலாய்இருப்பது அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவு மட்டுமே. நடிகர்களைதவிர்த்து பாடல் காட்சி இடம் பெறும் அழகிய இடங்களில் கவனம் செலுத்தினால்சற்றே ரசிக்கலாம். இரண்டே இரண்டு பாட்டுக்கள் பார்க்க கேட்க இரண்டும்அருமையாக உள்ளது.  திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஆறுதல்அளிக்கின்றன. ஆனால் எத்தனை காலம் தமிழ்ப்பட நாயகர்கள் அந்தரத்தில் பல்டிஅடித்த வண்ணமே இருப்பார்கள் என தெரியவில்லை.

படத்தில் தேடி பிடித்தால் கிடைக்கும் நல்ல விஷயம் விஷாலின் தந்தையாக வரும்மெளலியின் தேர்வு. அப்புறம் படம் முடியும் முன் வரும் சண்டைக் காட்சிகளில்வரும் சிவப்பு பேன்ட் போட்ட ஸ்டன்ட் நடிகர் விஷால் நெஞ்சில் உதைக்கும் வரைவிறைப்பாக நிமிர்ந்து நிற்பதை சொல்லலாம். மற்றவர்கள் அடி வாங்கும் முன்பேஅடிக்கு தகுந்தவாறு வளைய ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தப் படத்திற்கும் ஓயாமல் விளம்பரம் செய்யும் 'சன் பிக்சர்ஸ்' முன்பேபுளிக்க ஆரம்பித்து விட்டாலும் இம்முறை கசந்து விடும் வாய்ப்புள்ளதுஎன்பதை கவனிக்க வேண்டும். "தீராத விளையாட்டுப்பிள்ளை" - ரசிகர்களின்ரசனையிலும், பொறுமையிலும் ரொம்பவே எல்லை மீறி விளையாடி வருகிறான்.





ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 608
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
ragu பதிந்த நேரம் :18-02-2010 22:35:43
ha ha .. appo naanu?
சே.ராஜப்ரியன் பதிந்த நேரம் :15-02-2010 09:43:23
சத்தியமா சொல்றேன் பெருமாளே கேட்டுக்கோ, இவன்ல்லாம் ஃபிளேபாய் -னா நான் ஃபிளேபாய்க்கெல்லாம் பெரிய ஃபிளேபாய் நான்தான் தலைவன். முடியல எப்பா ஆளவிடுங்க.