மர்ம தேசம்

"மர்ம தேசம்"- கடவுள்களின் யுத்தம் என்ற பொருளில் தலைப்புக் கொண்ட ஆங்கில திரைப்படத்தை தேனாண்டாள் ஃப்லிம்ஸ் தமிழ் ரசிகர்களின் வசதிக்காக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

ஸ்பைரோஸ் என்ற மீனவனின் வலையில் ஒரு பெட்டி சிக்குகிறது. பெட்டிக்குள் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்ணின் பிரேதமும் இருக்கிறது. பெர்சீயஸ் என்று பெயரிடப்படும் அந்த குழந்தை வளர்ந்து தன் வளர்ப்பு பெற்றொர் மட்டும் தங்கையுடன் மகிழ்ச்சியாக கடலில் உலா வரும் பொழுது, அர்கோஸ் என்ற துறைமுக நகரில் கடவுளின் அரசனான 'ஜீயஸ்' என்னும் கடவுளின் சிலையை வீரர்கள் சிலர் உடைக்கின்றனர். இதனால் கோபப்படும் கடுவுள்களின் சார்பில் பாதாள உலகத்தில் வாழும் ஜீயசின் தம்பியான 'ஹேய்டஸ் மனிதர்கள் முன் தோன்றி அச்சுறுத்துகிறார். அதில் பெர்சீயஸின் குடும்பம் அழிகிறது. அர்கோசின் இளவரசியான அன்ட்ரோமேடாவை சூரிய கிரகணத்துக்குள் பலி கொடுக்கா விட்டால் அர்கோஸ் முழுவதையும் அழித்து விடுவதாக ஹேய்டஸ் மிரட்டி விட்டு போகின்றார். 'ஹேய்டஸை பழி வாங்க நினைக்கும் பெர்சீயசிற்கு அயோ என்னும் பெண் மூலம் பெர்சீயசிற்கு தான் ஜீயசின் மகன் என்ற உண்மை தெரிய வருகிறது. கடவுள்களுக்கும், மனிதர்களுக்குமான யுத்தத்தில் மனிதர்கள் பக்கம் நின்று ஹேய்டஸை வெல்ல தீர்மானிக்கிறான் பெர்சீயஸ்.

ஹேய்டஸை வெல்ல க்ராக்கன் என்னும் பயங்கரமான மிருகத்தை வென்றாக வேண்டும். அதற்கான வழியை தெரிந்துக் கொள்ள சூனியக்காரிகளை தேடி செல்கின்றனர் அயோ மற்றும் பெர்சீயஸ் குழுவினர். மூன்று சூனியக்காரிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கண் அதுவும் ஒருவரின் கை பாதத்தில் உள்ளது. பாம்பு உடம்பு கொண்ட மெடூசா என்னும் சபிக்கப்பட்ட பெண்ணின் தலைக் கொண்டு க்ராக்கனை வெல்லலாம் என சூனியக்காரிகள் சொல்கின்றனர். மெடூசாவின் கண்களை எந்த ஆண் பார்த்தாலும் அவர்கள் சிலையாகி விடுவனர். பெர்சீயஸ் சாதுர்யமாக மெடூசாவை நேராக பார்க்காமல், மெடூசாவின் தலையை கொய்து க்ராக்கனை அழிக்கிறான். ஜீயஸ் அளித்த தெய்வீக வாளைக் கொண்டு ஹேய்டஸை மீண்டும் பாதாள லோகத்திற்கு துரத்துகிறான் பெர்சீயஸ்.

கிரேக்க புராணத்தின் நெளிவு சுழிவுகளோடு படம் பயணக்கிறது. கதையையும் அதன் அனைத்து பாத்திரங்களையும் முழுமையாக உள்வாங்கி சிலாகிக்க முடியவில்லை. படத்தில் வரும் அரண்மனைகள், மிருகங்கள், ராட்சஷ தேள், க்ராக்கன் என்னும் கோரமான மிருகம், சண்டைக் காட்சிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், பறக்கும் குதிரைகள் என அனைத்தும் நாம் பல ஹாலிவுட் படங்களில் பார்த்தது போலவே இருப்பதால் படத்தினை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

அவதார் போல் இப்படமும் '3டி'யிலும் வந்துள்ளது எனினும் இப்படம் பப்படமே!!

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 248
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
சுவாமி.அரசானந்தா பதிந்த நேரம் :17-04-2010 08:44:23
இனிவரும் காலங்களில் நீங்கள், நல்ல படங்கள் பல பார்த்து சந்தோஷமடையுங்கள். சுகம் பவ்வா.................