திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு

எவ்வளவு சோகமாக இருந்தாலும், எங்கேயோ ஒலிக்கும் ஒருபாடல் மனதை தேற்றும்.மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதை மேலும் பன்மடங்காகபெருக்கும். பக்கத்து வீட்டிலோ, தெருவில்  நடந்து செல்லும்பொழுது யாரோஒருத்தரின்  வீட்டினுளிருந்து என்னை தேடிவந்து பரவசப்படுத்தும்ஒருபாடல்,பக்கத்து ஊரில் நல்ல நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட  ஒலிபெருக்கியில்ஊருக்கே செவி உணவு படைத்து  எங்களூருக்கும் அதை பரிமாறி சந்தோஷப்படுத்தும்ஒருபாடல். இப்பொழுதெல்லாம் பண்பலையில் இரவில் ஒலிக்கும் பாடல் என்னுடைய பலஇரவுகளை களவாடியிருக்கிறது. நிறைய சொல்லலாம் இசையை பற்றி மனதை உருகவைத்துஉற்சாகமளிக்கும் ஒரு உணர்வு பூர்வமான ரசனை. இதில் பெரும்பாலும் அந்தமேதையின் இசையாகத்தான்
இருக்கும் அதாவது பாடல். மற்றவகளின் படைப்பும் வந்து மகிழ்ச்சியளிக்கும். (BBC  - யின் பட்டியலை சொடுக்கவும்.)



என்னுடைய வாழ்நாளில் நான் கேட்டு லயித்த பலவற்றில் அவரின் இசையும் ஒன்றுஎன நான் சொல்வது மன்னிக்க முடியாத குற்றம். என் குழந்தை பருவத்திலிருந்தேநான் இசை என்ற ஒரு  "இனிய உணர்வை"  சுவீகரிக்க தொடங்கியதே அந்த மாமேதையின்பாடலை கேட்டுத்தான். அவர் ஒரு அசையும் பியானோ, பேசும் வயலின், நடக்கும்கிடார் என  அடுக்கிக் கொண்டே போகலாம் அவரைப்பற்றி. உலகத்திலுள்ள பல இசைமேதைகளில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. அதனால் மற்றவர்களை இங்கு நான்குறைத்து மதிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டாம். அனைத்து  இசைவல்லுனர்களுக்கும் ஒரு தனித்துவமிருக்கும். அது அவர்களுக்கே உரிய அடையாளம்அல்லது அவர்கள் வளர்த்துக் கொண்டது  அல்லது  இயற்கையாக அமைந்து அவர்களைசெழுமைப்படுத்தும் ஒரு மேன்மை.

தமிழ்நாடு மட்டுமின்றி நம் தாயகம்  இந்தியாவையும் தாண்டி உலகின் பல இடங்களில் தன் உழைப்பால், இசையால்
தலைநிமிர்ந்து  நிற்கும்  ஒரு தன்னிகரற்ற மனிதனை ரொம்ப சுலபமாக அவதூறுபேசி வருகிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே யார்மீது கோபம்?   


நீங்கள் தான் தூங்கி எழுந்திருக்கும் பொழுதே இன்று யாரை திட்டலாம் என்றஎண்ணத்தில்தான் உங்கள் பொழுது உதயமாகும்  என அடிக்கடி மேடையில் கூடபெருமையாக பேசுவீர்களே!! அதனால் நாளை என்னை திட்டுங்கள்?
 
நீங்கள் கீழே வருவதை பார்த்து எங்கயோ  பார்த்த  ஞாபகமாக இருக்கிறதே எனகுழம்பவேண்டாம். எல்லாம் உங்களின் வலைத்தளத்திலிருந்து சுட்டதுதான் அதவாதுதிருடினேன்.

//என் எழுத்தின் மிகத் தீவிர வாசகர்களுக்கே இந்தக் குழப்பம் ஏற்படுகிறதுஎன்றால், இளையராஜாவின் பக்தர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நேரடிவன்முறையில் இறங்குகிறார்கள். மத வெறியர்களைப் போல் எதிர்வினைஆற்றுகிறார்கள். //

வாசகர்களுக்கும், பக்தர்கள்/ வெறியர்களுக்கும் வேறுபாடு என்ன ? ரசனையின்உச்சம் என பொருள் கொள்ளலாமா? மதவெறியர்கள் போல் எதிர்வினையாற்றுவது இதன்அர்த்தமென்ன ? நீங்கள் எதை இங்கு சுட்டுகிறீர்கள், உங்களுக்கு குடிமீதுவெறி எப்படியுள்ளதோ அப்படித்தான் ஒவ்வொருவனும் அவன் மதம் மீது மிகுந்தபற்றை காட்டுகிறான். பாதக நிலைவந்தால் அவன், அவன்போக்கில் செயல்படுகிறான்.நீங்கள் குடித்துவிட்டு புலம்புவதுபோல.   

//ஜெ.வைப் போல் கறுப்புப் பூனைப்படை எல்லாம் வைத்துக் கொள்ள ஒரு ஏழைத் தமிழ் எழுத்தாளனால் இயலுமா?//

வேறொரு நபரை உதாரணம் காட்ட உங்களுக்கு தெரியாதா? இந்த உலகத்தில்அவரொருவர்தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறாரா ? எந்த  ஏழை இரண்டாயிரம்ரூபாய்க்கு  உள்ளாடை  போடுவான்? உண்மையா கேள்விப்பட்டேன்.

//இளையராஜா மேதை என்றால் அவருக்கு முன்னே தமிழ் சினிமாவில் கோலோச்சியஏகப்பட்ட மேதைகளைப் பற்றி நாம் ஏன் எப்போதுமே மௌனம் சாதிக்கிறோம் என்பதேஎன்னுடைய கேள்வி.//

யாரும் மெளனம் சாதிக்கவில்லை.  நீங்கள்தான் புதிதாக கட்டுக்கதைகட்டிவிடுகிறீர்கள். நீங்கள் வேண்டுமானால் அவர்களை மறந்திருக்கலாம். இன்னமும் திரு.கிட்டப்பா, திரு.கண்டசாலா, மெல்லிசை மன்னர்களின் பாடல்ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது. அவர்களை யாரும் இங்கு நிராகரிக்கவில்லைஅவர்களின் பாடல் ஓடினால் யாரும் காதை பொத்திக்கொள்வதில்லை. ஆயிரம் பேர்எழுதியிருந்தாலும் திரு.ஷேக்ஸ்பியரைத்தான் இந்த உலகம் கொண்டாடிவருகிறது.அதற்காக அதற்கு முன்பு எழுதியவர்களை யாரும் இங்கு நினைவுக் கூறாமலில்லை.அதுபோலத்தான் இசைஞானியும்.    

//இளையராஜாவுக்கு முன்னும், அவருக்குப் பின்னும் இது போன்ற ஒரு இசை மேதைஇங்கே இல்லை; இளையராஜா மட்டுமே இருக்கிறார் ’ என்ற ஒரு உனிஃஉஎ- ஆன இடத்தைஅவருக்கு வழங்குவதை மட்டுமே எதிர்க்கிறேன். சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். ’ இளையராஜாவுக்கும் முன்னால் மிகப் பெரிய சினிமா இசை மேதைகள்இருந்திருக்கிறார்கள்; அந்த வரிசையில் வந்த ஒருவரே இளையராஜா ’ என்பதுமட்டுமே என் வாதம். துரதிர்ஷ்டவசமாக அந்த வரிசையில் வந்த இளையராஜாவின் இசைஎனக்குப் பிடிக்கவில்லை. ஏன்? //

ஏனெனில் உங்களுக்கு ரசனயில்லை.

இசைஞானிக்கு பிறகு வந்த இசைப்புயலை இன்று எல்லோரும் கொண்டாடுவது ஏன்உங்களுக்கு மட்டும் தெரியவில்லை.  இசைப்புயல் இசைஞானியப் போலவேஅவருக்கென்று உலகவில் ஒரு இடத்தை (ஊணீQஊஏ) பிடித்து இன்று ஒரு ஒப்பற்றகலைஞனாக உலகம் முழுவதும் போற்றுவது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா ?இல்லை அவர் ஒரு மளாவியாக இருந்தால் நான் சொல்லுவதையெல்லாம் உண்மைதான் எனஏற்றுக்கொள்வீர்களா?  

//குறிப்பாக பிராமணர்களுக்கு இளையராஜாவைப் பிடிக்கும். காரணம், அவர்கர்னாடக இசையை நாட்டுப்புற இசையுடன் கலந்து கர்னாடக இசையைபிரபலப்படுத்தினார். அதனால்தான் செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரேபுகைப்படம் இளையராஜாவினுடையதாக இருந்தது.//

யாரும் செய்யாததை செய்தால்தான் இங்கு கொண்டாடுவார்கள். அவர்களின்விருப்பம். நீங்கள் ஏன் இசைஞானியின் புகைப்படத்தை உங்கள் வீட்டு சுவரில்மாட்டவில்லை ?  

//கர்னாடக இசை கெட்டியான இலக்கண காங்க்ரீட்டுகளால் உருவாக்கப்பட்டது.அதில் கொண்டு போய் நாட்டுப்புற இசையைக் கலந்தால் காப்பியில் சாராயத்தைக்கலந்தது போலத்தான் இருக்கும். 1985-இல், தில்லியிலிருந்து விடுமுறையில்தமிழ்நாட்டுக்கு வந்த நான், ‘ மரிமரி நின்னே’ என்ற தியாகராஜரின் அருமையானகீர்த்தனை ’ பாடறியேன் படிப்பறியேன் ’ என்ற கர்ண கடூர ரசாபாசமாகபட்டிதொட்டியெங்கும் ஒலிப்பதைக் கேட்டு மிரண்டு, விடுமுறையை ரத்து செய்துவிட்டு தில்லிக்கே திரும்பி விட்டேன்.//

 நீங்கள் ஓடிப்போனதே நல்லது. இன்னமும் அங்கேயே இருந்திருக்கலாம். ஏன்திரும்பி வந்தீர்கள்? நீங்கள் திரும்பிவந்த பிறகு இசைஞானி வேறு எந்த படத்திற்கும் இசை அமைக்கவில்லையா? வேறு உதாரணம் சொல்ல தெரியாதோ  "காப்பியில் சாராயம் கலந்தது " அடேங்கப்பா மலத்தில் மலர்வாசம் சேர்த்ததுபோலிருக்கிறது உங்கள் எழுத்து.  காங்க்ரீட்டுகளால் உருவாக்கப்பட்டது -அதுவரை எத்தனை ஊருக்கு அது தெரிந்திருக்கும் அது  தியாகராஜரின் அருமையானகீர்த்தனை என்று. நாம் எது செய்து ஒன்றை அழிக்கநினைத்தாலும் அதன் உண்மைநிலைத்து நிற்கும் எந்த காலத்திக்கும். எந்த கலவையும் எந்த கரையானும்கீர்த்தனையை அழிக்காது.  

//செம்மங்குடி போன்ற பிராமணர்கள் இளையராஜாவை கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், இளையராஜா தானே ஒரு பிராமணராக மாறியது.//
 
இங்கு ஒரு  இந்து கிறுத்துவனாகலாம், முஸ்லீம் ஆகலாம். அதேபோல் வேறு மதத்தைசார்ந்தவர்கள் மதம் மாறலாம். ஆனால் ஒரு உடையார் கவுண்டர் ஆகா முடியாது.கவுண்டர் செட்டியார் ஆகமுடியாது. வேண்டுமென்றால் கலப்பு திருமணம்செய்துக்  கொள்ளலாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக. அதற்கு சமுதாயத்தின்பார்வை எப்படி என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றால் அறிந்தவரிடம்கேளுங்கள் விடை கிடைக்கும்.        

//சமீபத்தில் ’ பழசிராஜா ’ என்ற மலையாளப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தபாடல்கள் தோல்வியடைந்தன. அது பற்றி எழுந்த கேள்விக்கு இளையராஜா கூறியபதில்: ” தோல்விக்குக் காரணம் நான் அல்ல; ஓ.என்.வி. குரூப் பாடல்களைசரியாக எழுதவில்லை. ” உலகத்திலேயே எந்த இசையமைப்பாளரும் இப்படி ஒருபதிலைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.ஓ.என்.வி. குரூப் கேரளத்தில் மிக மரியாதைக்குரிய கவிஞர். திரைப்படப்பாடலாசிரியர். மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சலீல் சௌத்ரிஇசையமைத்த பல மறக்கமுடியாத பாடல்களை இயற்றியவர். இளையராஜாவும் இதற்குமுன்பு ஓ.என்.வி. குரூப்புடன் இணைந்து பணியாற்றியவர்.//

சரி இது உண்மையோ பொய்யோ அது ஒரு பக்கமிருக்கட்டும். இப்பொழுது இசைஞானி கேரளத்தை சேர்ந்த ஒருவரை அப்படி சொல்லிவிட்டார் என்ற கோபமா? இல்லைஉண்மையிலேயே திரு. ஓ.என்.வி. குரூப், அவர்கள் மீது உங்களுக்கு அளவு கடந்தபற்றா? இல்லை இப்படி இசைஞானி மீது குற்றம் சொல்ல ஒரு "சால்ஜாப்புக்காக"அவரை இங்கு சொல்லிவுள்ளீர்களா? உண்மையிலேயே மரியாதை என்றால் ஒரு "திரு"சேர்த்திருக்கலாம் அதை செய்யவில்லை. நீங்கள் மற்றவர்களை வசைபாடுவதற்குஉங்கள் சார்பில் முன்வைக்கும் நபர்கள்கூட  மரியாதையை இழக்கவேண்டும் போல.வசைபாடுவதில் கவனம் செலுத்தும் வேகம் அனைத்தையும் மழுங்க செய்கிறது. இசைஞானி உலகஅளவில் மாபெரும் மேதை அவரை நீங்கள் இப்படி தூற்றுவது !?

//ஒரு மலையாள இதழியலாளர் இளையராஜாவைப் பேட்டி எடுக்கச் சென்றார். பேட்டிமூன்று மணி நேரம் தொடர்ந்தது. பேட்டி எடுத்தவருக்கு ஒரே தாகம். மூன்று மணிநேரமும் அவருக்குப் பச்சைத் தண்ணீர் கூடக் கொடுக்கப்படவில்லை. ஆனால்இளையராஜா மட்டும் அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் பேட்டி எடுக்கச் சென்றவர் தாகம் தாங்க முடியாமல் “சார், அந்தபாட்டிலைக் கொஞ்சம் கொடுங்க ” என்று கேட்க, அதற்கு இளையராஜா கூறிய பதில்:“அது என் தண்ணி .” //

இது குழந்தைதனத்தின் கோள் சொல்லும்   உச்சம் ."கோள்மூட்டி கோதண்டரே" என உங்களுக்கு பட்டம் வழங்கலாம்.
வாழக்கை  வேறு என் எழுத்து வேறு என நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். மறந்துவிட்டீர்களா? அவரது இசையை பற்றி சொல்லும் பொழுது இதை இங்கு சொல்லலாமா?நீங்கள் கூட தான் ஒருவரை கண்காணிக்க அவரது வீட்டிற்கு முன்பு ஆட்களைநிறுத்துனீர்களாமே!!

//எப்பவும் நான் ராஜா ' என்பது போன்ற மதிமயக்கங்களால் சிறந்த இசையை உருவாக்கிவிட இயலாது. ” //

நேற்று வந்த இளம் நடிகர்கள்(நண்டு சுண்டு) அவர்களை பற்றி பக்கம்பக்கமாகபேசலாம். நூறு பேரை தூக்கி போட்டு அடித்துவிட்டு சுய தம்பட்டம்அடித்துக்கொள்ளலாம். ஒரு மாபெரும் மேதை ஒரு துறையில் நீண்ட நாள் பல சாதனைசெய்துகொண்டிருப்பவர்  அவர் அப்படி தெரிந்தே கூட பாடியிருந்தால் என்ன ?

//இளையராஜாவுக்கு அவர் கற்ற நாட்டுப்புற இசை, கர்னாடக சங்கீதம்,மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம் ஆகியவற்றைத் தவிர சமகாலத்து உலக இசையுடன்எந்தப் பரிச்சயமும் கிடையாது ; மேலும் அவருக்கு உலக சினிமாவும் தெரியாது.சமகால இசையும், உலக சினிமாவும் தெரியாமல் சினிமாவுக்கு இசையமைத்தால்இப்படித்தான் ஆகும்.//

நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்களே உங்களை பெரிய மனிதன்என நினைத்துக்கொண்டு, நம்மால் மட்டும்தான் முடியும் பிறரை குறை சொல்ல, எனகுறைமனதுடன் மற்றவர்களை எடை போடுகின்றீர்கள். அது மாபெரும் அறியாமை.உங்களை விட கொடூராமாக  விமர்சனம் பண்ண பல நபர்கள் எப்போதே வந்துவிட்டனர்.அவர்கள் தர்மங்களின் வழியில் நிற்பதாலும், கொஞ்சம் லஜ்ஜையாக நினைத்தும் ஒதுங்கியுள்ளனர். அனைவரும் வெறுத்தொதுங்கும் ஒரு செயலை நீங்கள் விரும்பிசெய்தால்  நீங்கள் அதில் வல்லவராகிவிட முடியாது . "தம்மில் தம்மக்கள்பெரியோர்".  

//ரெகே இசையின் கடவுள் என்று சொல்லத்தக்க பாப் மார்லியை குப்பை என்றுகுறிப்பிட்டார் இளையராஜா. காரணம், தனக்குத் தெரிந்த இசையைத் தவிர வேறுஎல்லாமே குப்பை என்ற அவரது அறியாமையும், ஆணவமும்தான். //

நீங்கள் திரு.ஜெயமோகனின் புத்தகத்தை கிழித்தெறியலாம். இது நியாயமோ ? அவர் தகுதியுடன் விமர்சனம் வாயால் சொல்லியுள்ளார்  இது தவறோ ?
 
//ரஹ்மானின் மீது உள்ள பொறாமையை இப்படியெல்லாம் பொய்க்கதைகள் பேசித்தான்அவரால் ஈடுகட்ட முடியும் என்பது கூட ராஜாவின் இந்த டுபாக்கூர் கதைக்குமற்றொரு காரணமாக இருக்கலாம். //

இங்கு உங்கள் அரசியல் தந்திரத்திற்கு பாராட்டு . சிலரை திருப்தி செய்து நீங்கள் பூர்த்தியடைய பார்க்கிறீர்கள்.
இது செல்லாது செல்லாது.  திரு.இசைப்புயல் ஆஸ்கார் வரை சென்றுஇந்தியாவிற்கு பெருமை சேர்த்து, இன்னமும் அதற்காக  அனுதினமும்உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி எல்லாம்  நீங்கள் இனிமேல்
எழுதவேண்டாம். பொதுவாகவே திரைத்துறையைப்  பற்றி  ஊடங்கங்கள் புனையும் ஒருசெயலையே நீங்களும் கையாண்டிருக்கிறீர்கள். நீங்கள் தயவு செய்துவருடத்திற்கு ஒரு முறையாவது உண்மையை பேசுங்கள்.   

இங்கு எல்லோருடைய இசையும் ரசிக்கப்படுகிறது. சமீபகாலமாக வரும் புதுஇசையமைப்பாளர்களையும்  தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு ரசித்து வருகின்றனர்.

//இளையராஜாவின் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று, அவரை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு போடுவது, வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது.//

அதை நீங்கள் சொல்லக் கூடாது அவர் நேரடியாக சந்திக்கிறார். தமிழ்குடியில் பிறந்த வீரன்.



//இளையராஜா பற்றிய என்னுடைய விமர்சனத்துக்காக எனக்கும் அவர் வக்கீல்நோட்டீஸ் அனுப்பினால் நானும் அவர் மீது வேறோர் விஷயத்துக்காக மக்கள்மன்றத்தில் புகார் கொடுக்க நேரிடும். பாப் மார்லியைச் சொன்னது போல்ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிப் பாடகன் கத்தாரையும் மாத்ருபூமி என்றமலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குப்பை என்றுசொல்லியிருக்கிறார். இதற்காக நான் ஆந்திரத்தின் மக்கள் மன்றத்துக்குசென்றால் இளையராஜாவுக்கும் ஓலை வரும்; ஆனால் அந்த ஓலை வேறு மாதிரிஇருக்குமே என்றுதான் யோசிக்கிறேன்.//

ஏற்கனவே ஆங்காங்கே கலவரம் களியாட்டமாடிக் கொண்டிருக்கிறது. இங்கு நீங்கள்எல்லாவற்றையும் மாநில பிரச்சனையாக்க முண்டியாடிக்காதீர்கள். இது செல்லாதுசெல்லாது.

//இளையராஜாவை ஏன் எனக்குப் பிடிக்காது என்றால், அவரிடம் மனித நேயம் இல்லைஎன்பதுதான். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. இவரால் குப்பை என்றுகுறிப்பிடப்பட்ட பாப் மார்லி தனது 38-ஆவது வயதில் இறந்த போது அவரை நம்பி4000 ஜமைக்கா குடும்பங்கள் இருந்தது . பாப் மார்லி பிறந்து வளர்ந்த தேசமானஜமைக்காவின் ஜனத்தொகை வெறும் 28 லட்சம் என்பதையும் இங்கே சேர்த்துவாசித்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனித நேயம் கொண்டவர்களால் மட்டுமேநல்ல இசையை வழங்க முடியும். இதற்கு மேல் இளையராஜா பற்றி எனக்கு ஒன்றும்சொல்வதற்கில்லை. //

சாதிப்பதற்கு வயதில்லை அது ஒரு தாகம் தீரும்வரை குடித்துக் கொண்டேஇருக்கலாம். குடிக்க எதாவது கிடைக்கும் இடத்திலிருந்தால் உடனே தீரும்.இல்லையெனில் நெடுந்தூரம் பயணம் செய்து தீர்த்துக்கொள்ளலாம். இடமும்,மனமும், சூழ்நிலையும் அமைந்தால் உங்களைப்போலவே "பதிமூன்று வயதில் ஒருபெண்ணை புணர்ந்தேன் நான்" என அதை கூட சாதனையாக சொல்லிக் கொள்ளலாம்.சரிதானே!!

"சூழ்நிலைதான் மனிதனை உருவாக்குகிறது" என்பதை மறந்து விட்டீகளா? இதைசொன்னது யார் தெரியுமா? எதற்கெடுத்தாலும் வெளி நாட்டு பெயர்களைசொல்வீர்களே இதை சொன்ன மாமனிதனின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம் ?


மனிதநேய குறவர்

 

மனித நேயத்தின் மறுஉருவே

மக்கள் மனத்தில் பீடம் போட்டு

அமர்ந்திருக்கும் எங்கள் குல குருவே

கருணையை பரப்பும் மகராசா

இந்த மக்களைநீ மறப்பது

அவ்வளவு லேசா

உன் தொண்டு உலகறியும்

உன் களவு எழுத்துலகில்

தலையை சொரியும்

ஆகா நீ  ஒரு கரும்புள்ளி

புண்ணியம் செய்வதில்

நீ ஒரு கில்லி

நீ செய்த நல்லவைகளை

இந்த வலைத்தளம்  வலியோடு

தாங்கிக் கொண்டிருக்கிறது..

அழுது கொண்டே தினமும் சொல்லி.

என்றா வதொருநாள் வாய்விட்டு

அழலாம் அய்யய்யோ அய்யய்யோ

நீயும் அதை தொழலாம்.


// A simple letter from a very simple reader to a very great writer

சென்னை வந்து தங்களை சந்திக்க வேண்டும் உங்களோடு தண்ணியடிக்க வேண்டும், உங்கள் அன்புக்கு உரியவனாக வேண்டும் என விரும்புகிறேன். //


உங்களோடு குடிக்கவேண்டும் என கடிதம் எழுதினால், சிறந்த எழுத்தாளர்ஆகிவிடலாம் போலிருக்கிறது. ஆனால் நீங்கள் தரும் பட்டத்தை பெறுவதை விடவேறெந்த அவமானமும் இந்த உலகத்தில் இல்லை.   

//கல்லூரி மாணவியைப் போல் தோற்றமளித்த ஒரு அழகான பெண் என்னையே பார்த்துக்கொண்டு, தயங்கித் தயங்கி நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம் பேசவேண்டும் என்று நினைத்தும் என்னால் அது முடியவில்லை. தொடர்ந்து வாசகநண்பர்களின் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன். சிறிதுநேரத்தில் அவரே என்னிடம் வந்து ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்.அப்போது அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். புன்னகையுடன்“ரிலாக்ஸ்” என்றேன். அதற்கு அவர் “இன்று நான் அழுது விடுவேன்” என்றார்.சொல்லும்போதே அவர் குரல் நடுங்கியது. பெயர் என்ன என்று கேட்டேன். சரண்யாஎன்றார். மைக்கேல் ஜாக்ஸன் போன்ற பாடகர்களுக்குத்தான் இப்படிப்பட்டரசிகர்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.//

அட நாராயணா!!
பெருமாளே இது உனக்கே அடுக்குமா ?
மைக்கேல் ஜாக்ஸன் பாப் இசையின் மன்னல்லவா? உங்களை உலகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? ஐயஹோ..



//“இவ்ளோ அழகான பெண்ணைக் கவிழ்த்து இருக்கிறாரே; அதற்கு இவர் கையாண்டவழிமுறைகள் என்னவாக இருக்கும்; தெரிந்தால் நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்குஉதவியாக இருக்குமே?“ திட்டாதீர்கள் கிருத்திகா... கேட்டார், சொன்னேன்.//

ஐயோ ஐயோ தாங்கல. சும்மா பேசினால்கூட இவரை பார்த்து மயங்குவதாக சொல்லி ஏன் இந்த பிழைப்பு ?

//எடிட் செய்ய ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை. சில இடங்களில்ஒற்றெழுத்துக்கள் இல்லை. அவ்வளவுதான். இதுவே மலாவி அன்பராக இருந்தால் நாலுமணி நேரம் ஆகியிருக்கும். ஒரு வாக்கியம் கூட ஒழுங்காக எழுதத்தெரியாதவர்களுக்கெல்லாம் எழுத்தாளர் ஆகும் ஆசை வந்து விடுகிறது.//

இங்கு வலைப்பூவில் எழுதுபவர்கள் எத்தனை பேரை பார்த்து இப்படிசொல்கிறீர்கள்? உங்கள் வலைத்தளத்தை நீங்களே இன்னொரு முறை பாருங்கள் உங்கள்அறிவின்  புலமைப் பற்றி பிறகு பேசுங்கள். மளாவி தேசம் போய்விடுங்கள்.இங்கிருந்து கொண்டு என் மக்களை இகழாதீர்கள்.

//விஜய் டிவி நீயா நானாவில் சாரு நிவேதிதா கலந்து கொண்ட நிகழ்ச்சி வரும்ஞாயிறு 17.01.2010, இரவு 9.00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.//

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதியிருந்தீர்கள் நினைவிருக்கிறதா?
'நான் இனிமேல் நீயா நானாவில் கலந்துகொள்ள மாட்டேன் எனக்கு பணம்கொடுக்கவில்லையென்று.' எனக்கு உண்மையிலேயே புயரியவில்லை நீங்கள் அதைஎழுதுவதற்கு  முன்பே  கலந்துக்  கொண்டதா? அதை மறுபடியும் மறு ஒளிபரப்புசெய்துள்ளார்களா? உண்மையிலேயே எனக்கு இது குழப்பமாக உள்ளது விடை சொன்னால்நன்றாகயிருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்கு யாரோ கடிதம் எழுதியதாகவும், அதில்திரு.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சினிமாவில் எப்படி பெரிய நட்சத்திரமோ,அதே போல் வலையுலகில் நீங்கள்தான் பெரிய  "ஸ்டார்" எனகுறிப்பிட்டிருந்ததாக. உண்மையிலேயே  யாரோ கடிதம் எழுதினார்களா? அல்லதுநீங்களே அப்படி எழுதினீர்களா?
அப்படி என்றால் உங்களை பற்றி வரும் எல்லா கடிதங்கள் பற்றியும் வெளியே சொல்லுங்கள் இன்னும் நலமாக இருக்கும்.  (உங்களுக்கு எதிர்மறையாக  ஒருவர்கூடவா எழுதவில்லை?)

வலையுலகில் சூப்பர் ஸ்டார் யார் என்பதை "ஒரு பிரபல வலையுலக நட்ச்சத்திரம்" ஒரு நல்ல மனிதர் என்பதை ஒரு நபர் சிறிது நாட்களுக்கு முன்பாகவெளியிட்டார் அதை நிச்சயம் நீங்கள் படித்திருப்பீர்கள். அதனால் இது போன்றமனப்பால் குடிக்க வேண்டாம்.

எல்லாம் உங்கள் வலைத்தளத்திலிருந்து திருடியது. நீங்கள் மட்டும்மற்றவர்கள் எழுதியதை  திருடி உங்கள் கதை, நாவல் என வெளியிடலாம். என்பெயரில் இதை வெளியிடவில்லை உங்களுக்கு திருப்பிக்  கொடுத்து விடுகிறேன்.என்னையும்  கள்வன் என வலையுலகம் பழிக்கலாம். எனக்கு வேண்டாம் அந்தபட்டமெல்லாம்.

மேலும் நான் உங்களின் எழுத்துக்களுக்கு இப்படி நுணுகி நுணுகி பதில்தருவதால் ரசிப்பதாக நினைக்க வேண்டாம். என்ன செய்வது சாதனையாளர்கள் பற்றியாராவது பொய் பிரச்சாரம் செய்கிறார்களா என கங்காணி வேலை பார்க்கவேண்டிதானிருக்கிறது.

மற்றவர்களின் கற்பனையை திருடி உங்களுடையது என பிறிதோர் படைப்பாளியின் கலையை அபகரித்த  நீங்க ஒரு _________ .    

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 619
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
12
Ameer பதிந்த நேரம் :05-02-2010 17:53:59
"பதிமூன்று வயதில் ஒருபெண்ணை புணர்ந்தேன் நான்" Charru Saar Yaaru saar neeenga ??? romba dammy peesa irupeenga pola...
பவ் பதிந்த நேரம் :04-02-2010 15:35:50
இந்த குடிகார பையனுக்கு பெரிய புடிங்கின்னு நெனப்பு. ஏய் மொவன இனிமேலாவது திருந்துடா. இவனுக்கெல்லாம் பதில் சொல்லாதிங்க.
ஜங்கன் பதிந்த நேரம் :04-02-2010 15:33:31
வால்பையன் நீங்க அப்படியா சொல்றீங்க?? ஒருவேளை சாருவே இந்த பதிவை போட்டிருப்பாரோ!! இந்த 'சொலல் வல்லன்' யார் என்றே தெரியலையே!!
வால்பையன் பதிந்த நேரம் :04-02-2010 13:18:25
சாருவுக்கு இது இலவச விளம்பரம்! சாரு ஆசைப்படுவதும் அதையே!
jeevendran பதிந்த நேரம் :03-02-2010 23:51:19
அந்தாளை பார்த்தால் பயங்கர வில்லன் மாதிரித்தான் இருக்கிறார். செயலும் அப்படியா? சுய புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
சாணிஆணி பதிந்த நேரம் :03-02-2010 22:28:02
அப்புறம் என்ன கூ.. டா மலாவி என்றொரு தேசம்னு மலாவி ஆனந்த் எழுதினதை திருடி உன் பெயரில் போட்டார் நெ 1 இலக்கிய திருடன் சாரு நிவேதிதா ? ஆபிதீன்கிட்ட திருடி பிடிபட்டும் வெக்கமில்லாம திரியறயே , நீயெல்லாம் ஒரு ...
baalaa பதிந்த நேரம் :03-02-2010 19:36:06
chummaa sollak koodaadhu... veluthu vaangi irukkeenga...
  
12