ஷெல்லியின் பொன்மொழிகள்

உலக மாயை வர்ண ஜாலக் கண்ணாடி. ஞான  ஒளி பெற்ற உண்மையின் ஜோதியைத் தடுத்துக் கெடுக்கிறது. 

உறுதி மட்டும் வெற்றியைத் தேடித் தராது. உழைப்பும் சம பங்காக இருத்தல் வேண்டும்.

முடிந்த அளவுக்குத்தேடு - முடிந்த அளவுக்குச் சேமித்து வை - தேவைக்கு மட்டும் செலவு செய்.
 
 அதிகாரம் ஒரு தோற்று நோய்.அகந்தை, ஆணவம் என்ற மரணப்படுக்கையில் உன்னைஎளிதில் படுக்க வைத்து விடும். அதிலிருந்து விடுபடுவது கஷ்டம்.    

இலட்சியதாகம் - ஏழைகளின்  கண்ணீரை துடைக்க லாயக்கற்ற இதயம் கொண்டோர் அரசியல் நடத்தத் தகுதியற்றவர்.

அன்பு இல்லாத  எந்த செயலும் சிறக்காது - வெற்றி காணாது.

அதிகாரம் ஒரு கொள்ளைநோய். அது எதைத் தொட்டாலும் கெடுத்து விடுகிறது.

உனக்கு பழமை தெரியும்.அதிலிருந்து எதிர் காலத்திற்கு வேண்டியஎச்சரிக்கையைப் பெற முடியும். மனிதன் தன் தவறுகளிலிருந்தே  படிக்கிறேன்.அவற்றில் இருந்தே அனுபவம் பெறுகிறான்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ள எனது வெறுப்பு உணர்ச்சியைக் காட்டவே " நாத்திக வாதம்" என்ற சொல்லை நான் பயன்படுத்துகிறேன்.

உலகமே கடவுள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. மனிதர்களது பரந்து  பட்ட  அறிவாற்றலை நான் கடவுளாக காண்கிறேன்.

இறப்பு சுகமானது - ஆச்சர்யமானது - வினோதமானது - இறப்பின் இளைய சகோதரன்தான் உறக்கம்.

சமுதாய வேறுபாடுகளை களைத்தெறிந்து சமத்துவ உணர்வை உண்டாக்க வல்லது அன்பு ஒன்றே.
 

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 4
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)