லேடிபேக்

 

இந்த ஆண்களே  இப்படித்தான் கண்ட இடத்தில்  தூக்கிகிட்டு நிற்பார்கள்.முக்கியமாக  பொது இடத்தில் சொல்லவே வேண்டாம். ஆனால் இந்த பெண்கள் அப்படி இல்லை இயற்கையிலேயே அவர்கள் அடக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களின் ஆடை சற்று விலகினாலும் அது வேறு விவகாரமாக மாறிவிடும். ஆகையால்தான் அவர்கள் சில தவிர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இதை  கருத்தில் கொண்டு  ஜெர்மன் நாட்டில்  டின்டெர் நிறுவனம் பெண்களின் ''ஒன்'' பிரச்சனையை தீர்க்க
''லேடிபேக்'' (ladybag)  என்ற பாக்கெட்டை கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்தது. இந்த சிறிய பையின் உள்பகுதியில் ஜெல் தடவப்பட்டிருக்கும்.

பாக்கெட் டாய்லெட்டின் சிறப்புகள் :

பயணம் போன்றவற்றில் இதை நாப்கின் போல பயன்படுத்தலாம்.

சிறுநீர் கழித்ததும் அதில் பையில் உள்ள ஜெல் கலந்து மொத்த திரவத்தையும் ஜெல்லாக மாற்றிவிடும். அதன் மூலம்  சிறுநீரின் துர்நாற்றம் போய்விடும்.

வீடு சேர்ந்ததும் சாக்லெட் பார் அளவில் இருக்கும் அதை அகற்றி குப்பையில் எறிந்து விடலாம்.

துர்நாற்றமற்ற இந்த பையால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லை.

பையில் உள்ள ஜெல் ''உடலுக்கு தீங்கற்றது''என்கிறார் இதை கண்டுபிடித்த ஈவா டின்டெர்.

நாப்கின் போலவே இதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். அதிகபட்சம் அரை லிட்டர் வரை பிடிக்கும்.

உலகமெங்கும் 20000 மேற்பட்ட மருந்து கடைகளில் இவை கிடைகின்றன மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக தருவித்துக் கொள்ளலாம். இதே நிறுவனம் 2007 ஆண்களுக்கு இதுபோல அறிமுகம் செய்த ரோட்பேக் (roadbag) இப்போது ஆண்டுக்கு 2 லட்சம் விற்கிறது.


கண் மண் தெரியாமல் வரும் ஆத்திரத்தை கூட அடக்கி விடலாம். ஆனால் நேரத்தே அடைத்து வைக்க முடியாத கடனை அடக்க முற்படுவது சிரமம். மிகவும்  தவறும் கூட. இந்த விஷயத்தில் இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கு சில செளகரியங்களையும், சலுகைகளையும் சமூகம் அளித்துள்ளது. பெண்கள் பாடு சற்று திண்டாட்டம் எனினும் அவர்கள் அதற்கு பழக்கப்படுத்த பட்டு விட்டார்கள். அதுவும் சர்க்கரை நோயாளிகள் இதனால் படும் அவஸ்தைகளை சொல்லி மாளாது.

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 6
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
ராம விலாஸ் பதிந்த நேரம் :05-02-2010 16:53:55
மிக நல்ல கருத்து
சே.ராஜப்ரியன் பதிந்த நேரம் :05-02-2010 09:34:26
நன்றி. திரு.ராஜா அவர்களே, நன்றி அன்புக்குரிய. நிலாமதி அவர்களே
nilaamathy பதிந்த நேரம் :05-02-2010 06:32:51
பயனுள்ள தகவல். நன்றி.
raja பதிந்த நேரம் :04-02-2010 16:25:11
இந்தியாவில் கிடைத்தால் கண்டிப்பாக இது நல்ல விஷயம் தான். ஆனால் கை அடக்க விலையாக இருந்தால் பரவாயில்லை.