தீராத பசி

நட்சத்திர உணவகத்தில்
மிடுக்காக அமர்ந்து
மெதுவாக சாப்பிட்டேன்
அக்கம் பக்கம் உள்ளவர்களைப்
பார்த்து  நானும்
 
அந்தஸ்து காரணமாக
கொள்ள இடமிருந்தும்
மீதி வைத்தேன்
எதற்கென்று  தெரியவில்லை
அப்படித்தான் செய்கிறார்கள்
அங்கு வந்த அனைவரும்

என் எதிரிலேயே
வேண்டுமென்றே  நான் வைத்த
மிச்சமுள்ள தட்டு
அசுத்தமடைந்ததினால்
சுத்தம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது
மற்றவர்களின் பாத்திரத்துடன்
கழுவப்பட்டு மறுபடியும் வரும்
உணவேந்தி என் போன்றவர்களுக்காக

டிப்ஸ் கொடுத்ததற்காக
நன்றி ஒன்று கிடைத்தது
என்னை விட வயதில் மூத்தவரும்
ஏனோ அண்ணனென
என்னை அழைத்தது ஏனோ 

வெளியே வந்ததும்
பச்சிளம் குழந்தைதாங்கி
பரட்டை தலையுடன்
பிச்சை கேட்ட அவளுக்கு
நான் கடன்பட்டுத்தான் வந்தேன்
சில்லறையில்லாததால்



ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 8
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
சே.ராஜப்ரியன் பதிந்த நேரம் :08-02-2010 15:07:21
//பதிவு மிக அருமை ....உருக்கமாக உள்ளது ...இதை நானும் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன் ...ஆனால் உணவை மட்டும் மீதம் வைப்பதில்லை :)// நன்றி அன்பிற்குரிய சுபலலிதா அவர்களே, உணவை மீதம் வைக்காததற்கு இன்னொரு நன்றி அப்படியே தொடருங்கள்.
சுபலலிதா பதிந்த நேரம் :08-02-2010 14:58:23
பதிவு மிக அருமை ....உருக்கமாக உள்ளது ...இதை நானும் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன் ...ஆனால் உணவை மட்டும் மீதம் வைப்பதில்லை :)