இதற்கு தொடக்கவுரையாக எதை தருவதென தெரியவில்லை. சில சம்பவங்களை நினைத்து நம்மை அதிலிருந்து விடுபட்டு தேற்றிக்கொள்ள எவ்வளவு முயன்றாலும் அது நம்முடன் ஒட்டிக்கொண்டு நம்மை விட்டு நீங்காமலிருக்கும் இதையே இதற்கு தொடக்கமாக கொள்ளலாம்.
ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக ஒருவன் பணிபுரிந்து கொண்டு வந்திருக்கிறான். அவன் வெளியூர் என்பதால் அவன் அந்த கல்லூரியின் ஆண்கள் விடுதிலேயே தங்கிக் கொண்டிருந்திருக்கிறான். அவ்வப்பொழுது பெண்களின் விடுதிக்கும் இரவில் சென்று வருவானாம். ஒன்பது மணிக்குமேல்தான் அங்கிருந்து வருவானாம். கைபேசியில் நீண்ட நேரம் பேசி உயிரை எடுப்பானாம். அந்த காமுக முட்டாளை பெண்கள் விடுதி பாதுகாவலரும், வாயிற் காப்பாளரும் கண்டுகொள்வதில்லை. ஏனெனினில் அவன் விரிவுரையாளர் ஆண்களின் விடுதி காப்பாளர் என்பதால். வகுப்பிலேயே கொச்சை கொச்சையாக, வண்டை வண்டையாக பேசுவது அவனுடைய வழக்கமாம். பெண்களின்பால் தீராது ஆசை பிடித்தவனாம். ஒருவாறு பேசுவானாம் வழிந்தொழிவானாம் அந்த அறிவுகெட்ட வளர்ந்த வானரத்தின் கடைசி பரிணாம வளர்ச்சி.
இவன் ஒரு சகோதரியை (நமக்கு) அவ்வப்பொழுது தொந்தரவு செய்து வந்திருக்கிறான். அந்த மாணவியும் தன் வகுப்பிற்கு வரும் ஆசிரியர் என்பதால் பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். இவனின் சேட்டை எல்லை மீறி அவளை உயிர் விட வைத்திருகிறது.
( 25.01.2010 ) திங்களன்று அந்த சகோதரி கல்லூரி விடுதியிலிருந்து தன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் மன உளைச்சலை கொட்டியிருக்கிறாள் அவர்களும் வழக்கம் போல் ஆறுதல் கூறியுள்ளனர். அன்றிரவு சகோதரி தூக்கில் தொங்கி உயிர் நீத்திருக்கிறாள். விடயம் அறிந்த அந்த காமுக முட்டாள் தனது பொருட்களை, துணிகளை மூட்டை கட்டி கொண்டு எங்கோ தப்பித்து ஓடியிருக்கிறான். அவளின் பெற்றோர் அவளை எரித்துவிட்டு கல்லூரியில் வந்து முறையிட்டு இருக்கின்றனர்.
இந்த கொடூர சோகத்தை கேள்விப்பட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியும் பயனில்லை.
சகோதரி : வகுப்பில் அதாவது படிப்பில் படு சுட்டியாம் (Topper in the class)
ஊர் : கடலூர்
பெயர் : இதுமட்டும் போதும் உயிராயிதமேந்தி தன் சகிப்பு தன்மையின் எல்லையை உடைத்து தன்னை அழித்து கொண்ட உயிரோவியத்தின் பெயர் "நம் சாகோதரி"
நம் நாட்டில் மட்டும் இது போன்ற விடயத்தில் பாதிக்கபட்டவர்கள் பெயர் வெளியே தெரிந்தால் அவமானம், குற்றம் புரிந்தவன் பெயர் கொட்டை எழுத்தில் வரும் அதுதான் பத்திரிக்கையின் அபிமானம்.
கல்லூரியின் பெயர் : மைலம் பொறியியல் கல்லூரி, மைலம், திண்டிவனம் தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்.
காமுக முட்டாளின் பெயர் : தே........... பையன்.முருகானந்தம்
இவ்வளவு நேரம் சோகத்தில் நீங்கள் மூழ்கியிருப்பதால் சில நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக
இதுவரை அவனை கைது செய்யவில்லை, காவலர்கள் இன்னமும் அவனை தேடி வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகம் அவன் மீது இன்னும் புகார் கொடுக்கவில்லை என தெரியவருகிறது.
மாணவர்களின் போராட்டம் நடத்தியதால் கல்லூரியின் பாதுகாப்பிற்காக காவலர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது அதற்கு இடமில்லை முடிந்தது அந்த பிரச்சனை.
கல்லூரி முதல்வர் சகோதரியின் பெற்றோரை அழைத்து சில லட்சம் பணம் தருவதாகவும், நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் அப்பொழுதுதான் மாணவர்கள் அடங்குவார்கள். நாங்கள் எப்படி சொல்லியும் கேட்கமாட்டுகிறார்கள். என அறிவுரை வாரி வழங்கி உள்ளாராம்.
வேறு ஏதாவது பிரபலம்/ அரசியல்வாதி/ திரை நட்சத்திரம்/ தொழிலதிபர் அவர்கள் பற்றி ...........
நேற்று அவருடன் பேசினார், படுத்தார், சாப்பிட்டார், ஊர் சுற்றினார், உல்லாச விடுதியில் சல்லாபம், புதிய காதலில் விழுந்துள்ளார், விவாகரத்து, வீடு வாங்கியுள்ளார், குழந்தை பெயர், படிக்கும் பள்ளி, எத்தனை மாதம் கற்பம், யாருடைய விந்து, எந்த கை பேசி பயன்படுத்துகிறார், சம்பளம், பிடித்த வண்ணம், சாப்பாடு, .................... கொக்கா மக்கா குளியலறை கழிவறை வரை பாய்ந்து கிழிக்கும் ஊடகங்கள் இது பற்றி பேசாமல் ஊமையாக இருப்பது எதற்கோ?
நம் இதியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு இளம்பெண் உயிரிழப்பு அவ்வளவு சாதாரணமாக ஒதுக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டதா? அல்லது தினமும் வரும் தீவிரவாதிகள் தாக்குதல், இத்தனை பேர் பலி என வரும் செய்தி போல இதுபோன்ற சம்பவங்கள் பழகி போய்விட்டதா?
ஏதோ ஒரு தினசரி சிறியதாக இந்த செய்தியை வெளியிட்டு உள்ளதாம் ..
மக்களை அதிகம் சென்று அடையாத தொலைக்காட்சி, வேறு செய்தி கிடைக்காததால் பத்தோடு பதினொன்றாக இதையும் போட்டு புண்ணியம் சேர்த்துக்கொண்டதாம்.
இது என்ன பிக்பாக்கெட் செய்தியா என்ன ?
இதுவரை கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்லூரிக்கு பாதுகாப்பாக நின்று கொண்டு முட்டைக்கு வெள்ளை நிறம் வந்ததன் வரலாற்றை ஆராய்ந்து முடித்து சென்ற கால்வல்துறையின் கடமையையும், கண்ணியத்தையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்தவிதமான ஆழ்ந்த/கடினமான நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறை நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் ஒருவேளை பின்வருபனவாகக்கூட இருக்கலாம்.
கல்லூரியின் உரிமையாளர்
பாண்டிச்சேரி மாநிலத்தின் எதோ ஒரு தொகுதியின் MLA என்று கேட்டறிந்தேன் அதனாலா
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி
மணக்குள விநாயகர் மேலாண்மை & மேலாண்மை தொழிநுட்பம்
என இன்னபிற ..............
என இத்தனை தொழில் நடத்தி வருவதாலா என தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
இப்பொழுது எந்த ஆதாரமும் இல்லாததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரம் தேடி வருகின்றனர் போற்றுதலுக்குரிய காவல் துறையினர்.
சகோதரி நீண்ட நாட்களாக தன் பெற்றோரிடம் அவனுடைய தொந்தரவுகள் பற்றி புகார் கூறி வந்துள்ளாள். அவர்களும் இந்த ஆண்டு மட்டும் பொறுத்துக்கொள் அடுத்த ஆண்டு வேறு கல்லூரிக்கு உன்னை மாற்றி சேர்த்து விடுகிறேன் என சொல்லிவந்துள்ளனர். இப்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தவன் அன்று எல்லை மீறி எதையோ சகோதரியிடம் (நேரிலும்) அலை பேசியில் பேசியிருக்கிறான் அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
(முக்கிய குறிப்பு : காவல் துறையின் நிலைப்பாடு என்னவென்று எந்த பேராசிரியரும், மாணவர்கள் அது குறித்து கேட்டால் சொல்வதில்லையாம். நான் கல்லூரி மாணவர்கள் என்னுடன் பகிர்ந்ததை இங்கு சொல்லியுள்ளேன்)
சே.ராஜப்ரியன்
www.ithutamil.com